< Back
தேசிய செய்திகள்
கொடுத்த கடனை திருப்பி கேட்ட தந்தை - டிராக்டர் ஏற்றிக் கொன்ற மகன்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கொடுத்த கடனை திருப்பி கேட்ட தந்தை - டிராக்டர் ஏற்றிக் கொன்ற மகன்

தினத்தந்தி
|
25 May 2023 12:38 AM IST

மராட்டிய மாநிலத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட தந்தையை மகன் டிராக்டர் ஏற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் சாங்லி மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட தந்தையை மகன் டிராக்டர் ஏற்றி கொன்ற சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிராஜ் தாலுகாவில் உள்ள பெடாக் கிராமத்தில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாஜி என்ற தாது கணபதி அகாலே (வயது 70) என்ற நபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் கடனாக வாங்கிய ரூ.70,000-ஐ திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோபமடைந்த மகன் அவர் மீது டிராக்டரை ஏற்றி கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்