மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்..!
|மராட்டியத்தில் காதலனுடன் ஓடிப்போக மனைவிக்கு கணவனே உதவிய சம்பவம் நடந்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் காதலனுடன் ஓடிப்போக மனைவிக்கு கணவனே உதவிய சம்பவம் நடந்துள்ளது.
மராட்டியத்தில் உள்ள பீச்சிலா கிராமத்தைச் சேர்ந்தவர் சனோஜ் குமார் சிங். இவருக்கும் பிரியங்கா குமாரி என்பவருக்கும் கடந்த 10-ந்தேதி திருமணமாகி உள்ளது. திருமணத்திற்குப் பிறகு பிரியங்கா சோகமாக இருந்துள்ளதை சனோஜ் கவனித்துள்ளார்.
முன்னதாக பிரியங்கா அதே கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு சாதி என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் சனோஜை திருமணம் செய்த பிரியங்கா திருமணமாக 20 நாட்களுக்குப் பிறகு ஜிதேந்திராவுடன் ஓடிப்போக முயன்றுள்ளார்.
அவர்களை மடக்கி பிடத்த கிராம மக்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து அவரது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்துக்கு வந்த சனோஜ், அவர்களின் காதலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து, அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று கூறினார்.