< Back
தேசிய செய்திகள்
கடனை அடைப்பதற்காக கடத்தப்பட்டதாக நாடகமாடிய நபர் கைது

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கடனை அடைப்பதற்காக கடத்தப்பட்டதாக நாடகமாடிய நபர் கைது

தினத்தந்தி
|
2 Jun 2023 9:30 AM IST

மும்பையில் கடனை அடைப்பதற்காக கடத்தப்பட்டதாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் கடனை அடைப்பதற்காக போலியாக கடத்தப்பட்டதாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக கோரேகான் பகுதியில் ஜிதேந்திர ஜோஷி (27) என்ற நபரை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பங்கூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு டெம்போவில் ஜிதேந்திர ஜோஷி கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் வீடியோ காவல்துறையினருக்கு கிடைத்தது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தியதில், டிமார்ட் மாலில் மேலாளராகப் பணிபுரிந்து வரும் ஜிதேந்திராவுக்கு லட்சக்கணக்கில் கடன் உள்ளது. அதை அடைப்பதற்காக தனது குடும்ப உறுப்பினர்களிடம் பணம் பெற, தனது நண்பர் உதவியுடன் போலியாக கடத்தப்பட்டதாக வீடியோ எடுத்து நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து ஜிதேந்திரா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை ஜூன் 3-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்