< Back
தேசிய செய்திகள்
மராட்டியம்: மகா விகாஸ் அகாடி கூட்டணி - தொகுதி பங்கீடு
தேசிய செய்திகள்

மராட்டியம்: மகா விகாஸ் அகாடி கூட்டணி - தொகுதி பங்கீடு

தினத்தந்தி
|
1 March 2024 11:27 AM IST

டெல்லி, அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீட்டை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில் எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

டெல்லி, அரியானா, குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடனும் தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் கட்சி சுமுகமாக முடித்துள்ளது.

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் எதிர்கட்சிக் கூட்டணியான மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி 20 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும், பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பஹுஜன் அகாடிக்கு சிவசேனாவில் இருந்து 2 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்