< Back
தேசிய செய்திகள்
மராட்டியம்:  பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி பெண் விமானி காயம்
தேசிய செய்திகள்

மராட்டியம்: பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி பெண் விமானி காயம்

தினத்தந்தி
|
25 July 2022 2:45 PM IST

மராட்டியத்தில் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியதில் இளம் பெண் விமானி காயம் அடைந்து உள்ளார்.



புனே,



மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் கத்பன்வாடி கிராமத்தில் உள்ள பண்ணை நிலம் ஒன்றில் பயிற்சி விமானம் ஒன்று திடீரென இன்று காலை 11.30 மணியளவில் விழுந்து விபத்திற்குள்ளானது.

அதில் இருந்த 22 வயதுடைய இளம் பெண் விமானி பவிகா ரத்தோட் காயங்களுடன் தப்பியுள்ளார். விமானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட பவிகா உடனடியாக செல்காவன் பகுதியில் உள்ள நவ்ஜீவன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் மூத்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அவசரகால பணியாளர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர்.



மேலும் செய்திகள்