< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மகாராஷ்டிரா; ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஊழியர் உயிரிழப்பு
|27 Jan 2024 1:33 PM IST
ஆயுதத் தொழிற்சாலை வளாகத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை,
மகாராஷ்டிராவில் உள்ள பண்டாரா ஆயுதத் தொழிற்சாலை வளாகத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் காலை 8 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் 52 வயதான அவினாஷ் மெஷ்ராம் என அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்தபோது மெஷ்ராம் அன்றைய முதல் ஷிப்டில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் தனது டிபார்ட்மெண்டில் தனியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தொழிற்சாலையின் பொது மேலாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.