அசோக் சவான் காங்கிரசை விட்டு விலகுகிறாரா? அசோக் சவான் அளித்த பதில்
|காங்கிரசை விட்டு அசோக் சவான் விலகுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அதற்கு அவரே பதிலளித்தார்.
கட்சியில் இருந்து விலகல்?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்காக கட்சி அலுவலகத்தை திறப்பதற்கான நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் மற்றும் பாலசாகேப் தோரட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பதில்
அப்போது அசோக் சவான் தன்னை பற்றி நிலவும் ஊகங்களுக்கு பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், "இதுபோன்ற கருத்துகளுக்கு இயல்பாகவே நான் எந்த விளக்கமும் அளிக்க தேவையில்லை. சங்கர்ராவ் சவான் (அசோக் சவானின் தந்தை மற்றும் முன்னாள் முதல்-மந்திரி) காலத்தில் இருந்தே நாந்தெட் மக்கள் அன்பை பொழிந்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியுடன் பின்னி பிணைந்தது" என்றார்.
நம்புகிறோம்
காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், " அசோக் சவான் கட்சியை விட்டு விலகும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கு நாங்கள் தினமும் பதில் சொல்ல நேரிடுகிறது. இது மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சூழலை கெடுக்கும் முயற்சியாகும். அசோக் சவான் கட்சியை விட்டு வெளியேறமாட்டார். நாங்கள் அவரை எப்போதும் நம்புகிறோம்" என்றார்.
இதேபோல பாலசாகேப் தோரட், " இதுபோன்ற யூகங்களால் அசோக் சவான் கவலையடைந்துள்ளதாகவும், கட்சியை கட்டியெழுப்பவும், வலுப்படுத்தவும் அவரின் ஆளுமை தேவை என்றும் கூறினார்.