< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து - 2 மாணவர்கள் பலி, பலர் படுகாயம்
|12 Dec 2022 6:41 AM IST
மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
ராய்காட்,
மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் நேற்று மாலை 48 மாணவர்களுடன் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கோபோலி காவல் நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மாணவர்கள் சுற்றுலா சென்று விட்டு செம்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.