< Back
தேசிய செய்திகள்
மேகாலயாவில் ரிக்டர் 4.0 அளவில் லேசான நிலநடுக்கம்
தேசிய செய்திகள்

மேகாலயாவில் ரிக்டர் 4.0 அளவில் லேசான நிலநடுக்கம்

தினத்தந்தி
|
12 March 2024 7:41 PM IST

மேகாலயா மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

சில்லாங்,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் இன்று மதியம் 2.27 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

மேகாலயாவில் உள்ள வடக்கு காரோ மலைப்பகுதியில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்