வெறியோடு கடித்து குதறிய தெரு நாய்கள்... '4 வயது சிறுவன் பரிதாப பலி' - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!
|ஐதராபாத்தில் 4 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஐதராபாத்,
வடமாநிலங்களில் தெருநாய்க் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாய்கள் கடிப்பதால் சிறியர்வர்கள் முதல் பெரியர்வர்கள் வரை காயமடைந்து ஒருசிலர் பரிதாபமாக உயிரிழக்கவும் செய்கின்றனர்.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற 5 வயது சிறுவன் தந்தையுடன் அவர் காவலாளியாக வேலைபார்க்கும் பகுதிக்கு சென்ற போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த துயர சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
அதில் 5 வயது சிறுவன் தனியாக நடந்து செல்கின்றான். அப்போது திடீரென 3 தெருநாய்கள் சிறுவனைச் சூழ்ந்து கொள்கின்றன. இதனால் பதற்றமடைந்த சிறுவன் நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடுகிறான். ஆனால் நாய்கள் சிறுவனைத் துரத்தி கீழே தள்ளி அவனைச் சூழ்ந்து கொண்டு கடிக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு முறையும் நாய்களிடமிருந்து தப்பிக்க முயன்று சிறுவன் எழுந்த போது எல்லாம் நாய்கள் அவனைத் தாக்கி கீழே தள்ளி கொடூரமாக கடித்தன.
படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நாய் கடித்ததால் சிறுவனின் உடலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சிறுவன் உயிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெருநாய்க் கடி சம்பவங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.