மடிகேரியில் கஞ்சா விற்ற பெண் சிக்கினார்
|குடகு-
குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபொக்லு பஸ் நிலையத்தில் பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மடிகேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரப்பாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நாபொக்லு போலீசார், பஸ் நிலையத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பர்தா அணிந்த பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ெபண்ணை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அதேப்பகுதியை சேர்ந்த தில்ஷன் பேகம் (வயது 44) என்பதும், தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வரும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நாபொக்லு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.