< Back
தேசிய செய்திகள்
போலீசார் காலை பிடித்து கொண்டு ஜீப்பில் தொத்திக்கொண்ட பெண்கள்
தேசிய செய்திகள்

போலீசார் காலை பிடித்து கொண்டு ஜீப்பில் தொத்திக்கொண்ட பெண்கள்

தினத்தந்தி
|
11 Jan 2023 4:13 PM IST

மத்திய பிரதேசம் மொரேனா பகுதியில் சாஹேப் சிங் என்பவரிடம் விசாரணை நடத்த போலீசார் சென்றனர்.

போபால்

மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் பெண்களை போலீசார் ஜீப்பில் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஜனவரி 3 ஆம் தேதி, இந்த சம்பவம் பாரி கா புரா கிராமத்தில் நடந்து உள்ளது.

மொரேனா பகுதியில் உள்ள கிராமத்தில் சாஹேப் சிங் என்பவரிடம் விசாரணை நடத்த போலீசார் சென்றனர். ஆனால் அங்கு இருந்த பெண்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாஹேப் சிங் வீட்டிற்குள் இருந்தார், போலீசார் அவரை வெளியே அழைத்தபோது, அவரது தாய் வந்து போலீசாருடன் சண்டையிட்டார். சாஹேப் சிங் அந்த இடத்தை விட்டு ஓடும் வரை அவர் போலீஸ் அதிகாரிகளின் கால்களை பிடித்து கொண்டார். இதன் போது மற்றொரு பெண்ணும் இரண்டு ஆண்களும் போலீசாருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் பெண்கள் போலீசாரின்

லை பிடித்து கொண்டு வலுக்காடாயமாக ஜீப்பில் ஏறினர்.

மேலும் செய்திகள்