< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்: அடிபம்பில் ஒரே நேரத்தில் நீரும், நெருப்பும் வெளியேறியதால் கிராம மக்கள் பீதி...
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: அடிபம்பில் ஒரே நேரத்தில் நீரும், நெருப்பும் வெளியேறியதால் கிராம மக்கள் பீதி...

தினத்தந்தி
|
26 Aug 2022 8:05 AM IST

அடிபம்பில் இருந்து இவ்வாறு நீரும், நெருப்பும் ஒரே நேரத்தில் வெளியேறுவதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சார் கிராமத்தில் அடிபம்பு ஒன்றில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீரும், நெருப்பும் கொப்பளித்து வெளியேறியது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கச்சார் கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இரண்டு அடிபம்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு அடிபம்பில் இருந்து இவ்வாறு நீரும், நெருப்பும் ஒரே நேரத்தில் வெளியேறுவதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், அடிபம்பில் இருந்து நீருடன், நெருப்பு வெளியேறுவது அதிசய நிகழ்வு அல்ல என்றும், இது பொதுவாக ஹைட்ரோகார்பன் எனப்படும் மீத்தேன் வாயு வெளியேறுவதால் ஏற்படும் நிகழ்வு என்றும் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்