< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு - 4 பேர் காயம்
|23 July 2023 4:59 AM IST
மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
சத்தர்பூர்,
மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பக்ஸ்வாஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சார் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
முன்னதாக சத்தர்பூரில் உள்ள கர்ரி மற்றும் கச்சார் கிராமத்திற்கு இடையே வனத்துறையின் தோட்டத்தில் மின்கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், மழை பெய்த போது, மழையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அருகில் உள்ள மரங்களுக்கு அடியில் நின்றிருந்தனர்.
அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தாமோ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.