< Back
தேசிய செய்திகள்
கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு அடி உதை
தேசிய செய்திகள்

கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு அடி உதை

தினத்தந்தி
|
19 Dec 2022 5:09 AM IST

கணவரும், வேறு 7 ஆண்களும் சேர்ந்து, அந்த பெண்ணை நடுரோட்டில் கைகளை கட்டி, தடியால் அடித்து உதைத்தனர்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ராட்லம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண், தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி, கள்ளக்காதலனுடன் ஓடினார். சிறிது காலம் அவனுடன் வாழ்ந்தார். கணவரின் குடும்பத்தினர் அழைத்தபோதும் அவர் வர மறுத்து விட்டார்.

இதற்கிடையே கணவரும், அவருடைய குடும்பத்தினரும் அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்றனர். அதன்பிறகு, அப்பெண் அந்த வீட்டுக்கு வந்து வசிக்கத்தொடங்கினர். அதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், கணவருக்கு தகவல் கொடுத்தனர். கணவரும், வேறு 7 ஆண்களும் சேர்ந்து, அந்த பெண்ணை நடுரோட்டில் கைகளை கட்டி, தடியால் அடித்து உதைத்தனர். பிறகு அப்படியே சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதற்குள் தகவல் அறிந்து போலீசார் வந்து அந்த பெண்ணை மீட்டனர். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பெண்ணின் கணவர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்