< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்: விடுதியில் சப்பாத்தி தயார் செய்யும் பள்ளி மாணவிகள் - வீடியோ வைரலானதால் சர்ச்சை
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: விடுதியில் சப்பாத்தி தயார் செய்யும் பள்ளி மாணவிகள் - வீடியோ வைரலானதால் சர்ச்சை

தினத்தந்தி
|
21 Feb 2023 8:28 AM IST

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ, அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி விடுதியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் தங்கள் பள்ளி சீருடையை அணிந்தபடி சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்களை தயார் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

மேலும் பல்வேறு சமையல் பணிகளில் மாணவிகள் ஈடுபடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி பிரித்வி பால் சிங் கூறுகையில், "மாணவிகள் சமையல் பணிகளில் ஈடுபடுவது போன்ற வீடியோ பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. பள்ளி மாணவிகளை இது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது முறையல்ல. இது தொடர்பாக மாவட்ட டி.சி.பி.யிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்