< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்: உடலில் புகுந்த கெட்ட ஆவியை விரட்டுகிறேன் என கூறி பலாத்காரம்; சாமியார் கைது
|18 July 2023 10:00 PM IST
மத்திய பிரதேசத்தில் உடலில் புகுந்த கெட்ட ஆவியை வெளியே விரட்டுகிறேன் என கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கார்கோன் மாவட்டத்தில் வசிக்கும் மந்திர, தந்திர வேலைகளில் ஈடுபடும் 38 வயது நபரை அணுகி, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு அந்த நபர், உன் உடலில் புகுந்து உள்ள கெட்ட ஆவியை வெளியேற்ற வேண்டும். அதற்கு, உன்னுடன் உடல் சார்ந்த உறவு கொண்டு கெட்ட ஆவியை திருப்திப்படுத்த வேண்டும் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதுபோன்று பல முறை அந்த பெண்ணை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதன்பின்னர், அந்த பெண்ணையும், அவரது கணவரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டலும் விடுத்து உள்ளார். இதுபற்றி புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.