< Back
தேசிய செய்திகள்
சுயநினைவை இழந்த பாம்பு: வாயோடு வாய் வைத்து உயிர்பிழைக்க வைத்த காவலர்; குவியும் பாராட்டு...வீடியோ வைரல்!
தேசிய செய்திகள்

சுயநினைவை இழந்த பாம்பு: வாயோடு வாய் வைத்து உயிர்பிழைக்க வைத்த காவலர்; குவியும் பாராட்டு...வீடியோ வைரல்!

தினத்தந்தி
|
26 Oct 2023 7:27 PM IST

பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர், பாம்பு பூச்சிக்கொல்லி மருந்தில் விழுந்து மூர்ச்சையாகி இருப்பதை கண்டு, அதற்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து மீண்டும் உயிர்பிழைக்க வைத்தார்.

போபால்,

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நர்மதாபுரம் பகுதியில் பாம்பு ஒன்று விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் மீது விழுந்து மயங்கி மூர்ச்சையானது. அந்த சமயம் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர், பாம்பு பூச்சிக்கொல்லி மருந்தில் விழுந்து மூர்ச்சையாகி இருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக உயிர்காக்கும் சிகிச்சையை பாம்புக்கு காவலர் அளித்தார்.

இதனையடுத்து, வாயோடு வாய் வைத்து ஊதி பாம்புக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சக காவலர்களால் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. காவலரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதனை அனைவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்பை கையாளத்தெரிந்த நபர்கள் மட்டுமே இது போன்ற உடனடி உயிர் காக்கும் சிகிச்சையை பாம்புகளுக்கு முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்