< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்; என்னுடைய பொறுப்புகளை நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன்:  மோகன் யாதவ் பேட்டி
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்; என்னுடைய பொறுப்புகளை நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன்: மோகன் யாதவ் பேட்டி

தினத்தந்தி
|
11 Dec 2023 6:00 PM IST

மத்திய பிரதேசத்தில் ஜெகதீஷ் தேவ்த மற்றும் ராஜேஷ் சுக்லா ஆகிய இருவர் துணை முதல்-மந்திரிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

போபால்,

மத்திய பிரதேச புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் (வயது 58) இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், கட்சியின் சிறு தொண்டன் நான். மாநில மற்றும் மத்திய தலைமை மற்றும் உங்கள் அனைவருக்கும், நான் நன்றி தெரிவிக்கின்றேன். உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவால், என்னுடைய பொறுப்புகளை நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.

இதேபோன்று, மத்திய பிரதேசத்தில் ஜெகதீஷ் தேவ்த மற்றும் ராஜேஷ் சுக்லா ஆகிய இருவர் துணை முதல்-மந்திரிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 3-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 163 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.

இதனிடையே, மத்திய பிரதேச முதல்-மந்திரி யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. சிவராஜ் சிங் சவுகான் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்த நிலையில் அவருடைய மந்திரி சபையில் இடம்பெற்ற மோகன் முதல்-மந்திரி பதவிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளார். முதல்-மந்திரி பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்