< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குடும்பத்துடன் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்!
|17 Nov 2023 10:41 AM IST
மத்தியபிரதேசத்தில் 230 தொகுதிகளிலும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
போபால்,
சத்தீஷ்காரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும், சத்தீஷ்காரின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது.
இரு மாநிலங்களிலும் காலை முதலே மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தேர்தலையொட்டி 700 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மற்றும் மாநில காவல் துறையை சேர்ந்த 2 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் புத்னி தொகுதியில் உள்ள ஜெயித் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சேர்ந்து வாக்களித்தார்.