மத்திய பிரதேசம்: காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் நண்பனை குத்தி கொன்ற சிறுவன்
|மத்திய பிரதேசத்தில் காதலியுடன் பேசிய நண்பனை குத்தி கொன்ற சிறுவனை போலீசார் விசாரணை நடத்தி சில மணிநேரங்களில் கைது செய்தனர்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் நகரில் ஜார்சா கிராமத்தில் வசித்து வந்த 16 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் வழியே 15 வயது சிறுவன் தொடர்பு கொண்டு பழகியுள்ளான். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
16 வயது சிறுவனுக்கு, ஒன்றரை வருடங்களாக ஒரு சிறுமியுடன் நட்பு இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த சிறுமி, சிறுவனின் 15 வயது நண்பனுடன் கடந்த சில நாட்களாக பேசி வந்துள்ளார். இதனால், அந்த சிறுவன் காதலை வளர்க்க தொடங்கியுள்ளான்.
இந்நிலையில், தன்னுடைய நண்பன் காதலியுடன் பேசுவது பற்றி அறிந்ததும், 15 வயது சிறுவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் நண்பனை கொலை செய்வது என அந்த சிறுவன் முடிவு செய்துள்ளான்.
இதற்காக கடந்த செவ்வாய் கிழமை கடைக்கு சென்று கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளான். இதன்பின்பு, கடந்த புதன்கிழமை இரவில் திட்டமிட்டபடி, பீர் குடிக்க வரும்படி நண்பனை தனியாக அழைத்து சென்றுள்ளான். அப்போது, நண்பனை சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.
செக்டார் எண் 40 பகுதியில் உள்ள வீட்டின் முன் உடல் கிடந்துள்ளது. இதனை பாதுகாவலர் ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி சில மணிநேரங்களில் குற்றவாளியை கைது செய்தனர். உயிரிழந்த சிறுவன் 15 ஆண்டுகளுக்கு முன் குருகிராமுக்கு குடும்பத்துடன் வந்துள்ளான். பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் சிறுவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளியான மற்றொரு சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.