< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்; 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
தேசிய செய்திகள்

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்; 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

தினத்தந்தி
|
21 Oct 2023 7:39 PM IST

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதே சமயம் பா.ஜ.க. 136 வேட்பாளர்களின் பட்டியலை 4 கட்டங்களாக அறிவித்தது.

இந்த நிலையில் பா.ஜ.க. தற்போது 92 வேட்பாளர்களைக் கொண்ட 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுவரை பா.ஜ.க. 228 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், மீதம் உள்ள குணா மற்றும் விதிஷா ஆகிய 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்