< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்: மோசமான வானிலையால் தரையிறங்காமல் சென்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டர்
|22 Jun 2023 5:41 PM IST
மோசமான வானிலையால் பாலகாட் பகுதியில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போபால்,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மத்திய பிரதேசத்தின் பாலகாட் பகுதியில் நடைபெறும் ராணி துர்கவதி கவுரவ் யாத்திரையை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் பாலகாட் பகுதிக்குச் சென்றார்.
ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக அமித்ஷாவின் ஹெலிகாப்டரால் தரையிறங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமித்ஷாவின் பயண திட்டம் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.