< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்:  குழந்தைகளுக்கு இடையேயான மோதலில் ஒரு பெண் சுட்டு கொலை
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: குழந்தைகளுக்கு இடையேயான மோதலில் ஒரு பெண் சுட்டு கொலை

தினத்தந்தி
|
7 Jun 2022 8:21 PM IST

மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இரு பிரிவாக மோதி கொண்டதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.



இந்தூர்,



மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் சந்தன்நகர் பகுதியில் குழந்தைகள் இரு குழுக்களாக பிரிந்து மோதி கொண்டனர். ஒருவரை ஒருவர் அடித்து, தாக்கி கொண்டனர்.

இதனை கவனித்த அந்த குழந்தைகளின் பெற்றோர், அவர்களை விலக்கி விடுவதற்கு பதிலாக அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட தொடங்கியுள்ளனர்.

இதில் ஒரு கட்டத்தில் பெற்றோரில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து வந்து பெண் ஒருவரை நோக்கி சுட்டுள்ளார். அதன்பின் தப்பியோடி விட்டார்.

இந்த சம்பவத்தில் அந்த பெண் பலத்த காயமடைந்து உள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்