< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்: கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த கொடூரம்
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த கொடூரம்

தினத்தந்தி
|
17 Feb 2024 5:55 PM IST

கர்ப்பிணி பெண் சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவரை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கர்ப்பிணி பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அந்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். இந்த வழக்கில் தனது கணவர் மீது குற்றம் சுமத்திய பெண்ணிடம் சமரசம் பேசுவதற்காக சந்த்கா புரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு கர்ப்பிணி பெண் சென்றுள்ளார். அந்த வீட்டில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 4 பேர் இருந்துள்ளனர். அந்த 3 ஆண்களும் கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து கர்ப்பிணி பெண்ணின் மீது தீயை பற்றவைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கர்ப்பிணி பெண் சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாஜிஸ்திரேட் முன்னிலையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குறித்து கர்ப்பிணி பெண் வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்