< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தீயணைப்பு வீரர் தோற்றத்தில் விநாயகர் சிலை! தீ விபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய மருத்துவமனை
|3 Sept 2022 12:34 PM IST
இந்த விநாயகர் சிலை தீ விபத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகப் பெருமானின் சிலையை தீயணைப்பு வீரரின் சீருடை மற்றும் பாதுகாப்புக் கருவிகள் அணிவித்து அலங்கரிக்கபட்டுள்ளது.
இந்த விநாயகர் சிலை மக்களை கவர்ந்துள்ளது. மேலும் தீ விபத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவமனை அதிகாரி கூறுகையில், ஆகஸ்ட் 1ம் தேதி எங்கள் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு, வளாகத்தில் தீ பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டோம்.
அதனால்தான் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதற்காக, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு வீரர்களின் பின்னணியில் விநாயகப் பெருமானை உருவாக்க முடிவு செய்தோம் என்றார்.