< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி

தினத்தந்தி
|
27 July 2024 9:13 AM IST

ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்திருந்த பயணிகள் 2 பேர் தவறி கீழே விழுந்தனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் சாகர்-பினா இடையே ரெயில் பயணத்தின்போது ரெயிலின் பொதுப்பெட்டியில் அதிக பயணிகள் பயணம் செய்தனர். நேற்று காலை அந்த பெட்டியில் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் ஒருவர் டீ விற்பனை செய்து வந்தார்.

அப்போது டீ அங்கிருந்த பயணி மீது கொட்டியதாக தெரிகிறது. இதில் டீ வியாபாரிக்கும், பயணிக்கும் இடையே கைகலப்பாக மாறியது. இதனால் அந்த பெட்டிக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்திருந்த பயணிகள் 2 பேர் தவறி கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர்களில் ஒருவரின் அடையாளம் குறித்து எதுவும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்