< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்: தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
|23 March 2024 9:42 PM IST
தேனீக்கள் கொட்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போபால்,
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சிலர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென தேனீக்கள் கூட்டம் அவர்களை கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் அவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.
இதில் 5 தொழிலாளர்களுக்கு தேனீக்கள் கொட்டியதால் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மற்ற 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.