< Back
தேசிய செய்திகள்
உடல் நலக்குறைவால் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மதன்தாஸ் தேவி மரணம்
தேசிய செய்திகள்

உடல் நலக்குறைவால் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மதன்தாஸ் தேவி மரணம்

தினத்தந்தி
|
25 July 2023 4:00 AM IST

உடல் நலக்குறைவால் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மதன்தாஸ் தேவி மரணம் அடைந்தார்.

பெங்களூரு:

மராட்டியத்தை சேர்ந்தவர் மதன்தாஸ் தேவி (வயது 81). இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் ஆவார். வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் மதன்தாஸ் தேவி நேற்று மரணம் அடைந்தார். பெங்களூருவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் புனேவுக்கு எடுத்து செல்லப்பட்டது.

இன்று(செவ்வாய்க்கிழமை) அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. மதன்தாஸ் தேவி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதன்தாஸ் தேவியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தேசத்திற்காக அவரது வாழ்நாளை அர்ப்பணித்தார். நான் அவரிடம் இருந்து பலவற்றை கற்று கொண்டேன். அவரது மறைவை தாங்கும் சக்தியை கடவுள் அவரது குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டுகிறேன் என்று கூறி இருந்தார்.

மேலும் செய்திகள்