< Back
தேசிய செய்திகள்
ஆன்லைனில் நட்பு: உறவினர்களிடம் அறிமுகப்படுத்துவதாக அழைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்
தேசிய செய்திகள்

ஆன்லைனில் நட்பு: உறவினர்களிடம் அறிமுகப்படுத்துவதாக அழைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்

தினத்தந்தி
|
8 Jun 2022 4:03 AM IST

பஞ்சாபில் ஆன்லைன் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை உறவினர்களிடம் அறிமுகப்படுத்துவதாக கூறி வன்கொடுமை செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப்,

பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூரில் உள்ள பெர் கலான் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஷ்தீப் மான். இவருக்கு சமூக வலைதளம் மூலம் 21 வயது இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அப்பெண்ணை தன்னுடைய உறவினர்களிடம் அறிமுகப்படுத்துவதாக கூறி அழைத்துள்ளார். அதனை நம்பி வந்த அந்த பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அர்ஷ்தீப் மான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்