< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி

தினத்தந்தி
|
14 March 2024 2:53 PM IST

பரித்கோட் தொகுதியில் பஞ்சாப் நடிகர் கரம்ஜீத் அன்மோல் நிறுத்தப்பட்டுள்ளார்.

சண்டிகர்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை அறிவிக்க தொடங்கிவிட்டன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 8 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் 5 மந்திரிகள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, மந்திரிகள் குல்தீப் சிங் தலிவால் அமிர்தசரஸிலும், லால்ஜித் சிங் புல்லர் கதூர் சாஹிப்பிலும், குர்மீத் சிங் குடியன் பதிண்டாவிலும், குர்மீத் சிங் மீத் ஹேயர் சங்ரூரிலும், பல்பீர் சிங் பாட்டியாலாவிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

எம்.பி. சுஷில் ரிங்கு மீண்டும் ஜலந்தர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். பதேகர் சாஹிப் தொகுதியில் குர்ப்ரீத் சிங் ஜிபியை கட்சி வேட்பாளராக ஆம் ஆத்மி நியமித்துள்ளது. பரித்கோட் தொகுதியில் பஞ்சாப் நடிகர் கரம்ஜீத் அன்மோல் நிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்