காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
|பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
நெலமங்களாL
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
2 ஆண்டு காதல்
ஹாவேரியை சேர்ந்தவர் கருபசப்பா(வயது 24). இவர் பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் வசித்து வருகிறார். இதேபோல் நெலமங்களா நகர் பகுதியில் பிந்து(19) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும், கருபசப்பாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது இருவரும் தங்கள் செல்போன் எண்களை மாற்றி கொண்டு பேசி வந்தனர். நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர். அவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது.
திருமண ஏற்பாடுகள்
இதையடுத்து பிந்துவை, அவரது பெற்றோர் கண்டித்து உள்ளனர். மேலும் காதலை கைவிடும்படி அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு பிந்து மறுத்துள்ளார். மேலும், தொடர்ந்து கருபசப்பாவை அவர் காலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிந்துவுக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
மேலும், அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து வந்தனர். இதுகுறித்து அவர் தனது காதலனிடம் கூறி உள்ளார். இதையடுத்து 2 பேரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.
போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
இதையறிந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு நெலமங்களா போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது காதலுக்கு அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதும், வேறு ஒருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் வீட்டைவிட்டு வெளியேறியதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த பகுதியில் உள்ள காவடி மடத்தில் உள்ள ருத்ரேஷ்வர் கோவிலில் வைத்து அவர்கள் 2 பேருக்கும் திருமணம் நடைபெற்றது. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்களுக்கு போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.