இறந்த காதலியை திருமணம் செய்து கொண்ட காதலர்;இனி ஒரு திருமணம் செய்ய மாட்டேன் சத்தியம்
|சில நாட்களுக்கு முன்பு பிரார்த்தனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
கவுகாத்தி
ஷ்ரத்தா என்ற இளம் பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷ்ரத்தாவின் காதலன் அப்தாப் அவளை மிகக் கொடூரமாக கொலை செய்தான். அவரது உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு நகர் முழுவது தூவினார்.தன்னைக் காதலித்த இளம்பெண்ணை அப்தாப் இரக்கமின்றி கொன்றான்.
அதே நேரம் அசாமில் வசிக்கும் பிதுபன் தாமுலி என்ற இளைஞனின் காதல் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்த தனது நீண்ட நாள் காதலியை ஒரு வாலிபர் திருமணம் செய்துகொண்டார்.
இறந்த காதலி முன் தான் இனி ஒரு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து உள்ளார்.
அசாம் மாநிலம் மோரிகானை சேர்ந்தவர் பிதுபன் தாமுலியும் கொசுவா கிராமத்தை சேர்ந்த பிரார்த்தனா போரா என்ற இளம் பெண்ணும்நீண்டகாலமாக காத;லித்து வந்தனர். இந்த உறவும், இருவரின் திருமண செய்ய திட்டமிட்டு இருந்ததும் இரு வீட்டாருக்கும் தெரியும்.
சில நாட்களுக்கு முன்பு பிரார்த்தனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும், அவரை காப்பாற்ற முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் இறந்துவிட்டார்.
மனம் உடைந்த பிதுபன் தனது இறந்த காதலியை உற்றார் உறவினர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார். இறந்த காதலி முன் தான் இனி ஒரு திருமண செய்து கொள்ளப்போவது இல்லை என சத்தியம் செய்தார்.
இதுகுறித்து பிரார்த்தனாவின் சகோதரர் கூறியதாவது:-
"பிதுபன் வந்து இறந்த எனது சகோதரியை திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறினார். இது எங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதால் நாங்கள் பேசாமல் இருந்தோம். யாரோ ஒருவர் என் சகோதரியை இவ்வளவு ஆழமாக நேசிக்க முடியும் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை. அவரைத் தடுக்க முயற்சிப்பதை எங்களால் யோசிக்கக்கூட முடியவில்லை.
"அவர் அழுதுகொண்டே அவர் அனைத்து திருமண சடங்குகளிலும் ஈடுபட்டதை நாங்கள் பார்த்தோம். என் சகோதரி உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவள் பிதுபனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள்,பிதுபன் அவளுடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்றினார். வேறு என்ன சொல்ல வேண்டும்?" சுபோன் கேட்டார், அன்பின் செயல் முழு குடும்பத்தையும் நெகிழச்செய்தது என கூறினார்.