< Back
தேசிய செய்திகள்
காதல் திருமணம் செய்த வாலிபர் எரித்து கொலை; மகளுக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் எரித்து கொலை; மகளுக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி

தினத்தந்தி
|
4 July 2022 12:30 PM IST

தெலுங்கானா மாநிலத்தில் காதல் திருமணம் செய்த சாப்ட்வேர் என் ஜினியரை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம் அரங்கேரியுள்ளது.

தெலுங்கானா:

தெலுங்கானா மாநிலம்,சின்னாரம் மண்டலம், கோதல கொண்ட பள்ளியை சேர்ந்தவர் நாராயண ரெட்டி (வயது 26). இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியா நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ரெட்டி. இவரது மகள் ரவளி (வயது 24). நாராயண ரெட்டி, ரவளி இருவரும் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு ரவளியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் வசித்து வந்தனர். 2 மாதங்கள் கழித்து ரவளியை செல்போனில் தொடர்பு கொண்ட அவரது பெற்றோர் மகளை பார்க்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தனர். இதனை உண்மை என நம்பிய நாராயண ரெட்டி, மனைவியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்த மகளை அறையில் அடைத்து வைத்து கணவருடன் செல்போனில், பேசக்கூடாது, நேரில் பார்க்க கூடாது என கூறினார். மேலும் ரவளிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகள் செய்தனர். இதற்கு ரவளி சம்மதிக்கவில்லை. தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பது குறித்து கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் மனைவியை பார்ப்பதற்காக நாராயண ரெட்டி, ஐதராபாத் வந்தார். நாராயண ரெட்டி ஐதராபாத் வந்த தகவல் அறிந்த ரவளியின் சகோதரர் சீனிவாச ரெட்டி, அவரது நண்பர்கள் ஆசிப்,காசி ஆகியோர் காரில் சென்று நாராயண ரெட்டியை சந்தித்தனர். பின்னர் அவரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு நல்லூர் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று நான்கு பேரும் மது அறுந்தினர். அப்போது நாராயண ரெட்டியின் கருத்தை இறுக்கி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி உடலை எரித்தனர்.

ஐதராபாத் வந்த மகன் தங்களது வீட்டுக்கு வராததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நாராயண ரெட்டி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்தது.

இதை எடுத்து போலீசார் ரவையின் சகோதரர் சீனிவாச ரெட்டி ஆசிப் ஆசி ஆகிய 3 பேரை கைது செய்தனர். காதல் திருமணம் செய்த சாஃப்ட்வேர் இன்ஜினியரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்