< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு; காதல் ஜோடி தற்கொலை
|10 Aug 2022 3:13 AM IST
திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்.
பீதர்:
பீதர் டவுன் பகுதியை சேர்ந்தவர் சரத் (வயது 26). இவர் ஐதராபாத்தில் வேலை செய்து வந்தார். இவர் பீதர் டவுன் பகுதியை சேர்ந்த சவீதா (22) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் சவீதாவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதனை அறிந்த சரத், தனது குடும்பத்தினருடன் சவீதா வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது சவீதாவின் குடும்பத்தினர் திருமணத்துக்கு மறுத்துவிட்டனர்.
இதனால் மனமுடைந்த சரத், வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் சவீதா, தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பீதர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.