< Back
தேசிய செய்திகள்
தனிமையில் தொடர் உல்லாசம்: கள்ளக்காதல் ஜோடி வெட்டிக்கொலை
தேசிய செய்திகள்

தனிமையில் தொடர் உல்லாசம்: கள்ளக்காதல் ஜோடி வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
20 March 2024 6:31 AM IST

கள்ளக்காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயாப்புரா,

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தி தாலுகா கனி கிராமத்தை சேர்ந்தவர் சோமலிங்கப்பா. இவருக்கும் பசவகல்யாண் தாலுகாவை சேர்ந்த போரம்மாவுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த தம்பதிக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி. அவருக்கும் திருமணமாகி கணவர் மற்றும் லட்சுமணா என்ற மகன் உள்ளனர்.

இந்த நிலையில் சோமலிங்கப்பாவுக்கும், பார்வதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்து உள்ளனர். எனினும் அவர்கள் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கிராமத்தின் புறநகர் பகுதியில் சோமலிங்கப்பா மற்றும் பார்வதி ஆகிய 2 பேரும் உடலில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த கிராமத்தினர் உடனடியாக நிடகுந்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களை மர்மநபர்கள் ஆயுதங்களால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் யார் கொலை செய்தார் என்பது தெரியவில்லை. பார்வதியின் மகன் லட்சுமணா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று சோமலிங்கப்பா மற்றும் பார்வதி இருவரும் பாகல்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கிராமத்திற்கு திரும்பும் வழியில், மர்மநபர்கள் அவர்களை கொலை செய்தது உறுதியாகி உள்ளது. அந்த கோணத்தில் விசாரணை நடத்தும் போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்