< Back
தேசிய செய்திகள்
லண்டன் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - மும்பையில் தரையிறக்கம்
தேசிய செய்திகள்

லண்டன் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - மும்பையில் தரையிறக்கம்

தினத்தந்தி
|
15 Aug 2024 7:03 AM IST

விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

மும்பை,

ஏர்இந்தியா விமானம் ஒன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றது. இதில் 354 பயணிகள் பயணம் செய்தனர். அப்போது, விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை அறிந்த விமானி, உடனடியாக மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து விமானம் லண்டனுக்கு செல்லாமல் மீண்டும் மும்பைக்கு திரும்பி பத்திரமாக தரையிறங்கியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்