< Back
தேசிய செய்திகள்
மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் 17-ந் தேதி ஆலோசனை
தேசிய செய்திகள்

மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் 17-ந் தேதி ஆலோசனை

தினத்தந்தி
|
13 July 2022 6:25 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஓம்பிர்லா 17-ந் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, வருகிற ஜீலை 16-ந் தேதி மாலை 4 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இதே போல், வருகிற ஜீலை 17-ந் தேதி மாநிலங்களவை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்