< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல்: கிருஷ்ண பகவான் எங்களுடன் உள்ளார்.. - அரவிந்த் கெஜ்ரிவால்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: "கிருஷ்ண பகவான் எங்களுடன் உள்ளார்.." - அரவிந்த் கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
10 March 2024 7:04 PM GMT

உங்களுக்கு தர்மம் வேண்டுமா அதர்மம் வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் காங்கிரசும், ஒரே ஒரு தொகுதியில் ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது. அது குருஷேத்ரா தொகுதியாகும். அங்கு ஆம் ஆத்மி சார்பில் சுஷில் குப்தா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று குருஷேத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு சுஷில் குப்தாவுக்காக வாக்கு சேகரித்தார்.

அப்போது மகாபாரதத்தை குறிப்பிட்டு பேசிய கெஜ்ரிவால், "குருஷேத்ரா, தர்மயுத்தம் நடந்த புண்ணிய பூமியாகும். அந்த போரில் கவுரவர்களுக்கு எல்லாம் இருந்தபோதிலும் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்.

பாண்டவர்களுக்கு என்ன இருந்தது? கிருஷ்ண பகவான் அவர்களுடன் இருந்தார். இன்று, நம்மிடம் என்ன இருக்கிறது, நாம் மிகவும் சிறியவர்கள். ஆனால் நம்முடன் கிருஷ்ண பகவான் இருக்கிறார். அவர்களிடம் (பா.ஜனதா) எல்லாம் உள்ளது. அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அவர்களிடம் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளது. எங்களிடம் தர்மம் உள்ளது. இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையேயான போர். உங்களுக்கு தர்மம் வேண்டுமா அதர்மம் வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என கூறினார்.

மேலும் செய்திகள்