< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை - ராகுல்காந்தி பேட்டி
|2 July 2024 11:42 AM IST
அவைக்குறிப்பில் இருந்து எதனை வேண்டுமென்றாலும் நீக்கலாம், உண்மையை மறைக்க முடியாது என்று ராகுல்காந்தி கூறினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் மக்களவையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அவைக்குறிப்பு நீக்கம் குறித்து ராகுல்காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி,
எனது பேச்சில் எதை வேண்டுமானாலும் நீக்கட்டும். ஆனால் நான் பேசியது உண்மைதான். மோடியின் உலகத்தில் உண்மைக்கு இடமில்லை. ஆனால் யதார்த்தத்தில் உண்மையை நீக்க முடியாது. நான் சொல்ல வேண்டியதைச்சொன்னேன். அதுதான் உண்மை என்றார்.