< Back
தேசிய செய்திகள்
500 பேருக்கு கடன், நலத்திட்ட உதவிகள்
தேசிய செய்திகள்

500 பேருக்கு கடன், நலத்திட்ட உதவிகள்

தினத்தந்தி
|
5 Jan 2023 12:15 AM IST

கோலார்-சிக்பள்ளாப்பூர் கூட்டுறவு வங்கி சார்பில் 500 பேருக்கு கடன், நலத்திட்ட உதவிகளை ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ வழங்கினார்.

கோலார் தங்கவயல்:-

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் சட்டசபை தொகுதியில் கோலார்-சிக்பள்ளாப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வட்டியில்லா கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ., கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்தகவுடா ஆகியோர் கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினர். நேற்று கோலார் தங்கவயல் தாலுகாவில் உள்ள சுந்தரபாளையம் மற்றும் கேசம்பள்ளா ஆகிய கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட சுமார் 500 பேருக்கு ரூ.62.40 கோடி மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

அதை தொடர்ந்து ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பேசுகையில், 'இந்த கூட்டுறவு வங்கி விவசாயிகள், பெண்களின் முன்னெற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் நல்ல முறையில் வாழவேண்டும்' என்று கூறினார். அதை தொடர்ந்து கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்தகவுடா பேசுகையில், 'கூட்டுறவு வங்கி மூலம் வட்டியில்லா கடன் கொடுக்கப்படுகிறது. அதை விவசாயிகள், பெண்கள் பெற்று பயன் அடைய வேண்டும்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்