அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா: அத்வானிக்கு அழைப்பு
|ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்குவகித்தார்.
புதுடெல்லி,
அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டது.
வரும் ஜன.,22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இல்லம் சென்ற விஷ்வ ஹிந்துபரிஷத் அமைப்பின் அலோக் குமார், ஆர்.எஸ். எஸ். அமைப்பின் கிருஷ்ண கோபால், மற்றும் ராம்லால் ஆகியோர் விழா அழைப்பிதழை அத்வானியிடம் வழங்கினர். விழாவில் அத்வானி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மோகன் பகவத் இல்லத்திற்கும் சென்று விழா அழைப்பிதழை வழங்கினர்.
ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்குவகித்தார். 1990 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தடைகளை எதிர்கொண்டு, ஏராளமான மக்கள் மத்தியில் உரையாற்றி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என வாதிட்டவர் அத்வானி என்பர் குறிப்பிடத்தக்கது.