< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
27 Jun 2024 2:28 AM IST

எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி, நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை அறிக்கை ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

96 வயதான பா.ஜனதா மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறையை சேர்ந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனையில் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருந்தபோதும் அவரது உடல்நிலை குறித்து உடனடியாக தெளிவான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்