< Back
தேசிய செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி டிஸ்சார்ஜ்
தேசிய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி டிஸ்சார்ஜ்

தினத்தந்தி
|
27 Jun 2024 3:48 PM IST

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

96 வயதான எல்.கே.அத்வானிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறை மற்றும் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எல்.கே.அத்வானி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சினைகளுக்காக அத்வானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்