< Back
தேசிய செய்திகள்
லைவ் அப்டேட்ஸ்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம், குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது
தேசிய செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம், குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

தினத்தந்தி
|
7 Dec 2022 11:15 AM IST

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம், குளிர்கால கூட்டத்தொடருக்காக இன்று கூடியது


Live Updates

  • மேல்சபையில் பேசிய எம்பி பி.டி.உஷா பேச்சு
    7 Dec 2022 12:57 PM IST

    மேல்சபையில் பேசிய எம்பி பி.டி.உஷா பேச்சு

    மேல்சபையில் பேசிய எம்பி பி.டி.உஷா, கூறியதாவது;-

    ஒதுக்கப்பட்ட மக்கள் மீதான அக்கறைக்காக பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது ஜனாதிபதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது தேசத்துக்குக் கிடைத்த அருட்கொடை. பழங்குடியின சமூகத்தினருக்கு இது மிகப்பெரிய கவுரவம். இப்போதைய துணை ஜனாதிபதி ஒரு விவசாயியின் மகன் என்பது பெருமை எனக்கூறினார்.

  • நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
    7 Dec 2022 11:49 AM IST

    'நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன்' - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

    புதுடெல்லி,

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    நாடாளுமன்றத்தில் துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது,

    இந்த அவை மற்றும் நாட்டின் சார்பாக சபாநாயகர் ஜக்தீப் தங்கருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கிறேன். பல்வேறு தடைகளை சந்தித்து நீங்கள் இந்த நிலையை அடைத்து உயர்ந்துகொண்டு செல்கிறீர்கள். இது நாட்டு மக்கள் சிலருக்கு உத்வேகமாக இருக்கும்.

    நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன். அவர் ராணுவ பள்ளியில் பயின்றுள்ளார். ஆகையால், அவர் ராணுவ வீரர்களுடனும், விவசாயிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்.

    நாடு 75-வது சுதந்திர தினம் கொண்டாடும்போதும், ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்கும்போதும் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

    நமது ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கு முன், நமது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமூகத்தில் நலிவடைந்த பிரிவை சேர்ந்தவர். தற்போது நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன். நமது துணை ஜனாதிபதிக்கு சட்டத்துறையிலும் நல்ல அறிவு உள்ளது’ என்றார்.

  • ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடிய பாராட்டு
    7 Dec 2022 11:23 AM IST

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடிய பாராட்டு

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2022: ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடிய பாராட்டு\

    பிரதமர் மோடி, “நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன், நமது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவைச் சேர்ந்தவர், இப்போது நமது ஜனாதிபதி கிசான் புத்ரா. எங்கள் துணை ஜனாதிபதிக்கு சட்ட விஷயங்களில் நல்ல அறிவும் உள்ளது என கூறினார்.

  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2022: துணை ஜனாதிபதி ஜதீப் தன்கர் ராஜ்யசபா தலைவராக பதவியேற்றார்
    7 Dec 2022 11:18 AM IST

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2022: துணை ஜனாதிபதி ஜதீப் தன்கர் ராஜ்யசபா தலைவராக பதவியேற்றார்

    புதுடெல்லி:

    இந்தக்கூட்டத்தொடர்தான், தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிற கடைசிக்கூட்டத்தொடர் ஆகும்.

    இந்தக் கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடக்கும். 17 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் 29-ந் தேதி முடிவுக்கு வருகிறது.

    இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.

    நிர்வாகத்தை பலப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், பொறுப்புணர்வை அதிகரித்தல் மற்றும் பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் செயல்முறையை சீர்திருத்துதல் ஆகிய நோக்கங்களுடன் தற்போதுள்ள சட்டங்களை இணைத்து, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது.

    இந்த கூட்டத்தொடரில், கன்டோன்மென்ட் மசோதா, 2022-ஐ கொண்டு வரவும் மத்திய அரசு எண்ணி உள்ளது . இந்த மசோதா கன்டோன்மென்ட் என்று அழைக்கப்படுகிற ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிக ஜனநாயகம், நவீனமயமாக்கல் மற்றும் செயல்திறனை வழங்கும் நோக்கத்தில் கொண்டு வரப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவும், இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட உள்ளது.

    குளிர்காலக்கூட்டத்தொடரில் மொத்தம் 16 பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.

    விலைவாசி உயர்வு, தேர்தல் கமிஷனர் நியமன விவகாரம், சீனாவுடனான எல்லைப்பிரச்சினை, நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்புவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுவதால் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடரில் புயல் வீசும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட௨ரில் துணை ஜனாதிபதி ஜதீப் தன்கர் ராஜ்யசபா தலைவராக பதவியேற்று கொண்டார்.

மேலும் செய்திகள்