< Back
தேசிய செய்திகள்
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் லிஸ்ட்..! - இதிலும் தமிழ்நாடு முதலிடம்..!
தேசிய செய்திகள்

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் லிஸ்ட்..! - இதிலும் தமிழ்நாடு முதலிடம்..!

தினத்தந்தி
|
4 July 2023 11:44 PM IST

மத்திய கல்வி அமைச்சகம், ஆண்டு தோறும், இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவின் டாப் 100 உயர் கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தர வரிசை பட்டியல் 2023இல் கூறப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

ஒரு நிறுவனத்தின் ஆசிரியர்களின் தரம், ஆராய்ச்சிகள், பட்டம் பெறுபவர்களுக்கான வேலை வாய்ப்புகள், பன்முகத்தன்மை மற்றும் நிறுவனதைப் பற்றி பொது வெளியில் உள்ள கருத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், மத்திய கல்வி அமைச்சகம், ஆண்டு தோறும், இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இதில் 86.69 புள்ளிகள் பெற்று ஐ.ஐ.டி சென்னை முதல் இடத்தில் தொடர்கிறது. இரண்டாம் இடத்தில் பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி உள்ளது. அடுத்த மூன்று இடங்களிலும் ஐ.ஐ.டிகள் இடம் பெற்றுள்ளன. 72.14 புள்ளிகளுடன் டெல்லி எய்மஸ் நிறுவனம் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 62.74 புள்ளிகளுடன் 15ஆம் இடத்தில், கோவையைச் சேர்ந்த அமிர்தா விஷ்வ வித்தியாபீடம் இடம் பெற்றுள்ளது. 17ஆம் இடத்தில் வேலூர் வி.ஐ.டி நிறுவனமும், 18ஆம் இடத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகமும் இடம் பெற்றுள்ளன.

21ஆம் இடத்தில் திருச்சி என்.ஐ.டியும், 27ஆம் இடத்தில் சென்னை சவீதா மருத்துவ கல்லூரியும் இடம் பெற்றுள்ளன. 32ஆம் இடத்தை சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகமும், 36ஆம் இடத்தை கோவை பாரதியார் பல்கலைகழகமும் பெற்றுள்ளன. பாண்டிச்சேரி ஜிப்மர் நிறுவனம் 39ஆம் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைகழகம் 48ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்