டெல்லி அருகே நொய்டாவில் ஹோலி பண்டிகையையொட்டி ரூ.14 கோடிக்கு மது விற்பனை
|தலைநகர் டெல்லி அருகே நொய்டா நகரம் அமைந்துள்ளது. இது உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தது ஆகும்.
நொய்டா,
தலைநகர் டெல்லி அருகே நொய்டா நகரம் அமைந்துள்ளது. இது உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தது ஆகும்.
இங்கு ஹோலி பண்டிகையையொட்டி, அதற்கு முன்பு 2 நாட்களில் ரூ.14 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது. இது, கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு அதிக விற்பனை என மாவட்ட கலால்வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு கடந்த ஆண்டு ஹோலிக்கு முன்பாக ரூ.11.5 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனது. அதேவேளையில் கடந்த ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் 30, 31-ந்தேதிகளில் ரூ.9 கோடி அளவுக்கு மதுபானம் விற்கப்பட்டது.
ஹோலியையொட்டி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுடன், உள்நாட்டு மதுபான விற்பனையும் அதிகரித்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஹோலி பண்டிகைக்கு முந்தைய தினங்களில் மதுபான விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றாலும், வழக்கம்போல ஹோலி தினமான கடந்த புதன்கிழமை அன்று நொய்டாவில் மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.