< Back
தேசிய செய்திகள்
மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கு - மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Image Courtesy : PTI

தேசிய செய்திகள்

மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கு - மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
8 May 2024 7:47 PM IST

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை, கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லி மதுபான கொள்கையில் 2021-22ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட மணீஷ் சிசோடியாவை, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் காணொலி காட்சி வாயிலாக டெல்லி கோர்ட்டு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை வரும் 21-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்