< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் நான்கு நாட்கள் மது விற்பனைக்கு தடை - அறிவிப்பு வெளியீடு
தேசிய செய்திகள்

டெல்லியில் நான்கு நாட்கள் மது விற்பனைக்கு தடை - அறிவிப்பு வெளியீடு

தினத்தந்தி
|
27 July 2023 12:41 AM IST

பண்டிகை தினங்களை முன்னிட்டு டெல்லியில் 4 நாட்கள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மது விற்பனை தடை செய்யப்படும் நாட்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 31-ந்தேதி வரை டெல்லியில் மது விற்பனை தடை செய்யப்படும் நாட்கள் குறித்த அறிவிப்பை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி மொகரம் பண்டிகை (ஜூலை 29-ந்தேதி), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15-ந்தேதி), கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் 7-ந்தேதி) மற்றும் மிலாடி நபி (செப்டம்பர் 28-ந்தேதி) ஆகிய 4 நாட்கள் டெல்லியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்