< Back
தேசிய செய்திகள்
டெல்லி செங்கோட்டை மீது லேசான மழை பெய்யும்:  வானிலை மையம்
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டை மீது லேசான மழை பெய்யும்: வானிலை மையம்

தினத்தந்தி
|
15 Aug 2024 6:17 AM IST

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்படும் சூழலில், லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதன்பின் அவர், செங்கோட்டையில் இருந்து தொடர்ந்து 11-வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

இதனை முன்னிட்டு முக்கிய இடங்களில் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்படும் சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரையும் மற்றும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும் டெல்லி செங்கோட்டை மீது லேசான மழை பெய்யும் என தெரிவித்து உள்ளது.

இன்றைய தினம் மதியம் மற்றும் இரவிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்